மூன்றே மாதம் தான் அடுத்து 60 கி.மீட்டருக்கு ஒரு டோல்கேட் தான் – மத்தியமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு

396
Advertisement

நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது பட்ஜெட் மானிய கோரிக்கை மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில்  சாலை போக்குவரத்து துறைத்  தொடர்பான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது.

இந்த மானிய கோரிக்கை விவாதத்தின் போது மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். மக்களவையில் பேசிய மத்தியமைச்சர் நிதின் கட்கரி, ”அடுத்த மூன்று மாதங்களில் தேசிய நெடுஞ்சாலையில் 60 கி.மீ. தொலைவிற்கு ஒரு டோல்கேட் மட்டுமே இருப்பதை உறுதி செய்யப்படும். அப்படி 60 கிலோ மீட்டர்களுக்குள் இரண்டு டோல்கேட்கள் இருக்கும் பட்சத்தில் அவற்றில் ஒன்று அடுத்த மூன்று மாதங்களுக்குள் நிச்சயமாக மூடப்படும்.

அதேபோல் டோல்கேட் அருகே வசிக்கும் மக்கள் தங்களுடைய ஆதார் கார்டுகளை கொண்டு இலவச பாஸ் பெற்று கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆகவே அவர்களுக்கு எந்தவித சிரமமும் இருக்காது. ஜம்மு-காஷ்மீர் பகுதியை பொறுத்தவரை தற்போது 7000 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை போக்குவரத்து திட்டங்கள் அங்கு நிறைவேற்றப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளார் .