“லஞ்சம் கேட்டால் இனி இதனை உடனே செய்துவிடுங்கள்” – பஞ்சாப் முதல்வர்  அறிவுரை

403
Advertisement

ஊழல் தொடர்பான விஷயங்களைப் பொதுமக்கள் புகாரளிக்க மார்ச் 23 அன்று ஹெல்ப்லைன் சேவையைத் தொடங்க பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது.பஞ்சாப்பின் 17வது முதல்வராக பதவியேற்ற ஒரு நாளான உடனே முதல்வர் பகவந்த் மான் ட்விட்டரில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள முதல்வர் பகவந்த் மான், “பகத் சிங்கின் தியாகி தினத்தன்று, ஊழலுக்கு எதிரான ஹெல்ப்லைன் சேவை தொடங்கப்படும். இது எனது தனிப்பட்ட வாட்ஸ்அப் எண்ணாக இருக்கும். உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால், அவர்களின் ஆடியோ/வீடியோ கிளிப்பை பதிவு செய்து எனக்கு அனுப்புங்கள். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பஞ்சாபில் ஊழலுக்கு இனி கால்கள் இருக்காது” என தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 2015ல் டெல்லி முதல்வராக பதவியேற்ற அரவிந்த் கெஜ்ரிவால், ஊழலுக்கு எதிரான ஹெல்ப்லைன் எண் ‘1031’ ஐ தொடங்கினார். மேலும், பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சி தனது சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் ஊழலை ஒழிக்க பிரத்யேக ஹெல்ப்லைனை வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்தது.