வந்தாச்சு ‘மஞ்சப்பை இயந்திரம்’

215
Advertisement

மக்கள் துணிப்பைகளுக்கு திரும்பும் வகையில்,’மீண்டும் மஞ்சப்பை’ என்ற இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிவைத்தார். இதன் மூலம் நெகிழிப்பைகளின் பயன்பாட்டை தவிர்த்து, அதற்கு மாற்றாக துணிப்பைகளை உபயோகிக்கும் பழக்கத்தை பொதுமக்களிடம் ஏற்படுத்த தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில்,

மக்கள் பயன்பெறும் வகையில் பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ தன் ட்விட்டர் பக்கத்தில் மஞ்சப்பை இயந்திரத்துடன் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்” மஞ்சப்பை விற்பனை இயந்திரம் இறுதியாக விட்டது. பொது இடங்களில் மலிவு விலையில் துணி பைகள் கிடைப்பது சவாலாக உள்ளது. சந்தை, பேருந்து நிறுத்தங்கள் போன்ற பொது இடங்களில் இவற்றை வைக்க பணிகள் நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.