முதல் மனைவிக்கு தெரியாமல் 2வது திருமணம் செய்து கொண்ட கணவன்!

296
Advertisement

முதல் மனைவிக்கு தெரியாமல் 2வது திருமணம் செய்து கொண்ட கணவன் மீது புகார் அளித்துள்ளார் அவரது முதல் மனைவி.

சென்னையடுத்த பல்லாவரம் பம்மல் அருகே உள்ள மூங்கில் ஏரியை சேர்ந்தவர் சரண்யா .இவருக்கு வயது 30.

இவர் 30வயதான வினோத் என்பவரை காதலித்து இரு வீட்டார் சமந்தத்துடன் 8 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு 7வயதில் சாய்ஸ்ரீ என்ற பெண் குழந்தை இருக்கிறது.

3 வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுப்பாடு காரணத்தால் இருவரும் பிரிந்து விட்டார்கள்.

தனியாக வசித்து வந்த சரண்யா தன் சொந்த காலில் வேலை செய்து தனியாக சாய்ஸ்ரீயுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் கணவர் வினோத் பெங்களூரை சேர்ந்த பெண்ணை 2வதாக கல்யாணம் செய்து கொண்டுள்ளார் என

முதல் மனைவி சரண்யா சில நாட்களுக்கு முன்பு சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த வழக்கின் அடிப்படையில் போலீசார் தற்போது வினோத்தையும் அவரது இரண்டாவது மனைவியையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.