சோழர் காலத்தில் இல்லாதவர் எப்படி சோழர்களுக்கு குருவாக இருப்பார்? வசமாக சிக்கிய வானதி ஸ்ரீனிவாசன்…

141
Advertisement

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளதை அடுத்து, ஆளும் கட்சியினர் இந்த நிகழ்வை கொண்டாடி தீர்த்து வருகின்றனர். ஆனால், அவ்வாறு உணர்ச்சிவசப்படும் போது பகிரும் பதிவுகளை நெட்டிசன்கள் ஆராய்ந்து குறை கண்டுபிடிப்பது வாடிக்கை.

அப்படித்தான் மீண்டும் ஒரு முறை வசமாக சிக்கியுள்ளார் பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன். நமக்கு நாமே கட்டி முடித்த என தொடங்கும் அவரின் முகநூல் பதிவில் தமிழ் மொழிக்கு பெருமையும் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. மேலும், இந்தப் பதிவில் சோழர்களுக்கு குருவாக திருவாவடுதுறை ஆதீனம் இருந்தார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில், கி.பி.1246-ம் ஆண்டு முதல் கிபி 1279 வரையிலான 3-ம் ராஜேந்திர சோழன் தான் பிற்கால சோழர்களின் இறுதிப் பேரரசர். அதாவது, சோழர்களின் வரலாறு 13ஆம் நூற்றாண்டோடு முடிவடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் சைவ சமயம் வளர்க்க உருவாக்கப்பட்ட ஆதீன மடங்களின் வரலாறு 14ஆம் நூற்றாண்டில் இருந்து தான் தொடங்குகிறது. இந்நிலையில், சோழர் காலத்தில் வாழாத திருவாவடுதுறை ஆதினம் சோழப்பேரரசர்களுக்கு எப்படி குருவாக இருக்க முடியும் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.