நாகலாந்து சட்டமன்ற தேர்தலில் NDPP கட்சியுடன், பா.ஜ.க தேர்தலை சந்திக்க உள்ளதாக ஹிமந்த பிஸ்வா தெரிவித்துள்ளார்

142

நாகலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் NDPP கட்சியுடன் இணைந்து, பா.ஜ.க தேர்தலை சந்திக்க உள்ளதாக அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

நாகலாந்து முதலமைச்சர் நெய்பியூ ரியோ, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மாவும் உடனிருந்தார். இந்த சந்திப்பிக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, நாகலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில்

NDPP கட்சியுடன் இணைந்து, பா.ஜ.க தேர்தலை சந்திக்கும் என்று தெரிவித்தார். NDPP கட்சி 40 தொகுதிகளிலும், பா.ஜ.க 20 தொகுதிகளிலும் போட்டியிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement