“உனக்கு வேணுனா கீழ இறங்கு”-கல்யாண பெணின் வைரல் வீடியோ

383
Advertisement

சொந்தங்கள் கூடிருக்க வாழ்வை புதியதாக துவங்கும் மணமக்கள் இடையே சுவாரசியமான தருணங்கள் நிறைந்தது  தான் திருமணம்.குறிப்பாக வடமாநிலங்களில் நடைபெறும் திருமணங்களில் ஸ்வாரசியத்திற்கு பஞ்சமே இல்லை. 

சில சமயங்களில்  பல திருப்புமுனை கொண்டதாக அமைந்துவிடுகிறது அவர்களின் திருமணம்.சமீப காலமாக  திருமணத்தில் நடந்த வேடிக்கையான தருணங்கள் இணையத்தில் உலா வருகிறது.தற்போது மற்ற ஒரு  வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/COmw3UVHkeq/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

இன்ஸ்டாவில் பகிரப்பட்ட இந்த வீடியோவில் ,மணமகன் மணமகள் ஒருவருக்கொருவர் மாலையை மாற்றிக்கொள்ளும் நேரத்தில்  மணமகனை அவரின் நண்பர்கள் தோளில் தூக்கிக்கொண்டனர்.மணமகளுக்கு மணமகனின் உயரம் எட்டவில்லை.

அவரின் நண்பர்கள் மணமகளை முடிந்தால் மாலையை போடு என்பது போல வேடிக்கை காட்டிக்கொண்டு இருக்க,மணமகளோ, மணமகனை பார்த்து உனக்கு வேணும்னா கீழ இறங்கி வா என்பது போல செய்கையில் கூறிவிட்டு அங்குள்ள ஷோபாவில் அமர்ந்துவிடுகிறார்.

மணமகளின் சாமர்த்தியத்தை கண்டு உறவினர்கள் சிரித்து மகிழ்ந்தனர்.இந்த கடினமான தருணத்துல யாரு கடைசில இறங்கி வந்துருப்பானு சொல்லுங்க பாப்போம்?