ஒரு வருடத்தில் உருவாக்கப்படும்..

283

தமிழக அரசின் மாநில கல்விக்கொள்கையை ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமயிலான குழு ஓராண்டில் உருவாக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் புதிய கல்விக்கொள்கையை  உருவாக்குவதற்காக குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பாக 13 பேர் கொண்ட குழுவை அமைத்து, அதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இதன்படி, மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர் இந்த குழுவின் உறுப்பினர் செயலராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற டெல்லி உயர்நீதிமன்ற நீதியரசர் முருகேசன் தலைமையிலான இந்தக் குழு, ஓராண்டில் புதிய கல்விக்கொள்கை குறித்த இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கல்விக்கொள்கைக்கு மாற்றாக மாநில கல்விக்கொள்கை உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.