சென்னையில் வசிக்கும் மக்களுக்கு நல்செய்தியாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது அது பற்றி இத்தொகுப்பில் பார்க்கலாம்.
சென்னையில் எப்பொழுதுமே பரபரப்பாக காணப்படும் இடங்களில் ஒன்று கோயம்பேடு மார்க்கெட்,இந்த கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தை அழகுபடுத்தும் விதமாக 7 ஏக்கரில் பிரமாண்டமான பூங்கா ஒன்றை அமைத்திட சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பொதுவாக கோயம்பேடு என்று சொன்னாலே நமக்கெல்லாம் நியாபகம் வருவது பேருந்துகள் தான் வெளியூர் தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகிறது,அது மட்டுமல்லாமல் கோயம்பேடு சந்தை அனைவருக்கும் மிகவும் பரிட்சயமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இத்துணை நெரிசல் மிக்க இடத்தில் இந்த பூங்கா அமையவிருக்கிறது.
7 ஏக்கரில் பிரமாண்டமாக அமையவிருக்கும் இந்த பூங்காவில் இந்த பூங்காவில் நடைபயிற்சி செய்வதற்கான இடம், ஜாக்கிங் செய்வதற்கான பாதை ,குழந்தைகள் விளையடுவதற்கான இடங்கள், செடிகள், மரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு நவீன பூங்காவை அமைக்க சிஎம்.டிஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். கோயம்பேடு மார்கெட் வளாகத்தில் தொழிலாளர்களின் வசதிக்காக அவசர சிகிச்சை பிரிவு மற்றும் படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை அமைப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசிப்போப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.