உயர்ந்து கொண்டே போகும் தங்கம் விலை

203
Advertisement

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது.

அதன்படி, தங்கம் விலை கிராமுக்கு 24 ரூபாய் உயர்ந்து, 4 ஆயிரத்து 817 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 192 ரூபாய் அதிகரித்து, 38 ஆயிரத்து 344 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை குறைந்து , ஒரு கிராம் வெள்ளி 65 ரூபாய் 90 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளி 65 ஆயிரத்து 900 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.