அம்மாவின் கணவரிடம் தன்னை தத்தெடுக்குமாறு கேட்கும் சிறுமி !

413
Advertisement

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஓர் வீடியோவில் சிறுமி ஒருவர் தனது அம்மாவின் திருமணத்தில் தன்னைத் தத்தெடுக்குமாறு அம்மாவின் கணவரிடம் கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியது

பல பெற்றோர்கள் பெரும்பாலும் ஒரு குழந்தையை தத்தெடுத்து அவர்களுக்கு ஒரு புதிய வாழ்க்கையை கொடுக்க விரும்புவார்கள் . ஆனால் அதைவிட பெரியது , ஒரு குழந்தை தன்னை பெற்றோரால் தத்தெடுக்க விரும்பும் தருணம் ஆகும்

இது போன்ற ஒரு அழகான தருணத்தை இன்ஸ்டாகிராமில் பிரபலம் ஒருவர் பகிர்ந்துள்ளார். அதில் , சிறு வயது பெண் தனது அம்மாவின் கணவரிடம் தன்னைத் தத்தெடுக்குமாறு, எவ்வாறு கேட்கிறாள் என்பதைக் காட்டுகிறது.

இந்த வீடியோவில் , பெண் ஒருவர் மனகோலத்தில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு தன் மக்களுடன் நிற்கிறார் . இதையடுத்து மகள் ” தத்தெடுப்பு ” ஆவணங்கள் தன் அம்மாவை திருமணம் செய்த நபரிடம் நீட்டி ,

“ இதை செய்ய 2,555 நாட்கள் காத்திருந்ததாக கூறி , ஃபிராங்க் நீங்கள் என் அப்பாவாக இருப்பீர்களா?” என கண்களில் ஆனந்த கண்ணீருடன் கேட்கிறாள் . சிறுமியின் கேள்விக்கு பதிலைத்த அந்த நபர் , மனப்பூர்வமாக உன்னை மகளாக ஏற்றுக்கொள்வதாக கூறி அனைத்து கொள்கிறார். இந்த நிகழ்வு , நெட்டிசன்களையும் மிகவும் உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது.