வினோதமான கடல்வாழ் உயிரினத்தை பிடித்த ரஷ்ய மீனவர்!

257
Advertisement

மனித கண்களுக்கு விசித்திரமாகத் தோன்றும் உயிரினங்களால் கடல் நிரம்பியுள்ளது.சில நேரங்களில் ஆழத்திலிருந்து எதிர்பாராமல் சில உயிரினங்கள் கரைக்கும் வரும் போது அவை வறண்ட தரையில் இறந்து கரை ஒதுங்குகிறது.

சில நேரங்களில் மீனவர்கள் வலையில் அதுபோன்ற வித்யாசமாக காணப்படும் மீன்கள் சிக்கிக்கொள்கிறது.இந்நிலையில் ரஷ்ய மீனவர் ஒருவர் வினோதமான ஆழ்கடல் உயிரினத்தைப் பிடித்து உள்ளார், இணையத்தில் இந்த உயிரினத்தை  ‘பேபி டிராகன்’ என்று நெட்டிசன்கள் அழைக்கின்றனர்.

https://www.instagram.com/p/CbSmWjKMEqb/?utm_source=ig_embed&ig_rid=92541247-a692-4a19-91ff-b74c01196214

ரஷ்ய ஆழ்கடல் மீனவர் ரோமன் ஃபெடோர்ட்சோவ் சமீபத்தில்  நீருக்கடியில் கண்டுபிடிக்கப்பட்ட வினோதமான  உயிரினங்களின் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் மற்றொரு  கடல்வாழ் உயிரின புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இணையத்தில் அவர் பகிர்ந்த புகைப்படம் வைரலாகி உள்ளது. இணையவாசிகளோ இந்த  உயிரினத்தை ” ட்ராகன் குட்டி ” என அழைக்கின்றனர்.

பின்பு, இது ஒரு சிமேரா என அடையாளம் காணப்பட்டு உள்ளது ,இது ‘கோஸ்ட் ஷார்க்’ என்றும் அழைக்கப்படுகிறது.

பிடிபட்ட மீனுக்கு , பெரிய  கண்கள் மற்றும் நீண்ட வால் உள்ளது. வெளிர் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். அதன் இரு பக்கத்தில் இறக்கைகள் இருப்பது போல் தோற்றத்தில் உள்ளது,