நிலுவைக் கடன் 6.53 லட்சம் கோடி-தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

324
Advertisement

2023ம் ஆண்டு மார்ச் 31ம் நாள் வரையிலான நிலுவைக் கடன் 6.53 லட்சம் கோடியாக இருக்கும் என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

2022 – 2023ம் ஆண்டு வரவு – செலவுத் திட்ட மதிப்பீட்டில் வருவாய் பற்றாக்குறை 52 ஆயிரத்து 781.71 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

வருவாய் பற்றாக்குறையை முறையாக குறைப்பதன் மூலம் வருவாய் பற்றாக்குறை இல்லாத நிலையை அடைவதற்கும், தமிழ்நாடு நிதி நிலை நிர்வாக பொறுப்புடைமை சட்டத்தில் கூறப்பட்ட நெறிமுறைகளை பின்பற்றி, நிதிநிலை மேம்பாடு மற்றும் கடன் தாங்குதன்மையை உறுதி செய்யும் வகையிலும் இடைக்கால நிதி நிலவரத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

2022 – 2023ம் ஆண்டு வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் நிதிப்பற்றாக்குறை விகிதம் 3.63 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.