கள்ளக்குறிச்சி அருகே வனப்பகுதியில் இருந்து வந்த மர்ம விலங்கு கடித்ததில் 13 ஆடுகள் பலியானதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்….

97
Advertisement

சின்னசேலம் அருகே உள்ள நையினார்பாளையம் வனப்பகுதி அருகே உள்ள வீடுகளில் விவசாயிகளின் கால்நடைகளை மர்ம வனவிலங்கு கடித்துக் கொண்டு வருவதால் விவசாயிகள் அச்சம் அடைந்தனர்.

இந்நிலையில், நைனார்பாளையம் வனப்பகுதி அருகே உள்ள ரவிச்சந்திரன் என்பவர் அவரது வீட்டில் சுமார் 15 கால்நடைகளை பட்டியில் வழக்கம்போல் அடைத்துள்ளார். இதனை அடுத்து  பட்டியில் புகுந்த மர்ம விலங்குகள் 13 ஆடுகளை கடித்து குதறியதில் ஆடுகள் பலியானது.  காலை ஆட்டுப்பட்டியை பார்த்த ரவிச்சந்திரன் உயிரிழந்த ஆட்டை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.