+2 பொதுத்தேர்வு – தமிழில் 100 மதிப்பெண் பெற்ற நாமக்கல் மாணவர்

164

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று, மாநிலத்திலேயே தமிழ் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் என்ற சாதனையை நாமக்கல் மாணவர் படைத்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம்.

இவர் குமாரபாளையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு கணித அறிவியல் பாடத்தில் தமிழ் வழியில் பயின்று வந்தார்.

Advertisement

நேற்று வெளியான 12ஆம் வகுப்பு தேர்வு முடிவில், ஸ்ரீராம், தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று, மாநிலத்திலேயே தமிழ் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார்.

மாணவனை பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் வெகுவாக பாராட்டினர்.