“திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை” – EPS குற்றம்சாட்டு

35

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிக்கு சென்ற அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக தான் விவசாய கடன்களை ரத்து செய்தது, திமுக விவசாய கடன்களை ரத்து செய்யவில்லை என்று கூறினார்.

அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ சீட் வழங்கும் திட்டத்தை அதிமுக தான் கொண்டு வந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement

மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்வோம் என்று திமுக கூறியது, ஆனால் கல்விக்கடனை ரத்து செய்யவில்லை என்று பழனிசாமி கூறினார்.

இதுபோன்று பல தேர்தல் வாக்குறுதிகளை  திமுக நிறைவேற்றவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.