பஞ்சாப் தேர்தல் அம்ரீந்தர் சிங் பின்னடைவு ,சித்து முன்னிலை

271
Advertisement

பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் முதல் சுற்றில் வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவை சந்தித்துள்ளார் .இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆளும் காங்கிரஸ் 2-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி பஞ்சாப் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, அகாலிதளத்தின் பிக்ரம் சிங் மஜிதியா மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஜீவன் ஜோத் கவுரை எதிர்த்து அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.
முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் முதல் சுற்றில் வாக்கு எண்ணிக்கையில் பின்தங்கியுள்ளார். ஆம் ஆத்மி வேட்பாளர் அஜித்பால் கோஹ்லி முதல் சுற்றில் 3,575 வாக்குகள் முன்னிலை பெற்றார்.