அறிவு.. அழகு.. குறும்பு..
சீட்டோசை திருடி தின்ற நாய்க்குட்டி

283
Advertisement

செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்கள் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை கடந்து வீட்டின் அங்கமாகவே மாறிவிட்டன. பலரும் நாய்களை தன் குழந்தையாகவே வளர்ப்பதுண்டு.

நாய்கள் மிகவும் குறும்புத்தனமான விலங்கு, சில சமயங்களில் நீங்கள் அவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும், குறிப்பாக உணவு விஷயத்தில்.

ஒரு சிறிய நாய்க்குட்டியின் முன் கவனிக்கப்படாமல் விடப்படும் உணவு என்ன நிலைமை ஆகும் என்பதை நாம் நேரடியாகவே பாத்துருப்போம்.

அதே நேரத்தில் அவைகள் செய்யும் குறும்புகளை ரசிக்காமல் இருக்கவே முடியாது . இதுபோன்று நாய்கள் செய்யும் சேட்டை வீடியோகள் இணையத்தில் குவிந்துள்ளன .

சமீபத்தில் இது போன்ற ஒரு வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ளது. பார்ப்பவர்களை மகிழ்விக்கும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அப்படி என்ன இருக்கு இந்த வீடியோலனு கேக்கறீங்களா .. ?

இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த இந்த வீடியோவில் , நபர் ஒருவர் தன் வீட்டில் உள்ள மேஜை மீது சாப்பிடுவதற்காக வைத்திருந்த சீட்டோஸ் பாக்கெட் ஒன்றை வைத்துவிட்டு இரண்டு வினாடிகள் அந்த இடத்திலிருந்து விலகி சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த, அவரின் செல்ல நாய்க்குட்டி தன் இரு பின்னங்கால்களில் நின்றபடி தன் முகத்தை அவர் வைத்திருந்த சீட்டோஸ் பாக்கெட் உள்ளேவிட்டு தின்றுகொண்டு இருந்தது.

https://www.instagram.com/p/CbTFH0WIFgM/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

இந்த பதிவில் , நான் அவளிடமிருந்து இரண்டு வினாடிகள் விலகிச் சென்றேன் என கூறுகிறார் அதன் உரிமையாளர். மற்றும் “அம்மா நான் ஓய்வறைகளை சுத்தம் செய்து கொண்டிருந்தேன்” என்ற தலைப்புடன் இந்த வீடியோ பகிரப்பட்டது.

இந்த குட்டி நாயின் சேட்டையை ரசிக்கும் இணையவாசிகள் அதிகம் வீடியோவை அதிகம் பகிர்ந்து வருகின்றனர் .