தள்ளுபடி தரும் உணவகம்…இது தான் உண்மையான ஆஃபர் !

369
Advertisement

ஒரு பொருள் உடனடியாக விற்று தீர வேண்டுமென்றால் அதற்கு தகுந்த வணிக யுக்திகளை பயன்படுத்த வேண்டியது தற்போதைய காலத்தில்  மிகவும் அவசியம்.  எந்த ஒரு பொருளுக்கும் சிறப்பு தள்ளுபடியை வழங்கினால், அது உடனடியாக விற்று விடும். அந்த பொருளை வேறு யாராவது வாங்கி விடுவதற்கு முன்னராக, நாம்  அதை வாங்கிவிட வேண்டும் என்கிற ஆர்வத்தை தூண்டுவதற்கே இந்த சிறப்பு தள்ளுபடி வேலை செய்கின்றன.இது போன்ற வணிக யுக்திகளை நாம் பெரும்பாலும் பல இடங்களில் பார்த்திருப்போம். சாதாரண தெரு கடைகள் முதல் ஆன்லைன் ஷாப்பிங் வரை இது போன்ற வழிகளை அடிக்கடி பார்க்க நேரிடும்.

இந்த வணிக யுக்தியை உணவகங்களிலும் பயன்படுத்தி வருகின்றனர். இது தற்போதைய புதிய ட்ரெண்டாகவும் உள்ளது. சில உணவகங்கள் இந்த யுக்தியை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர். இவ்வளவு உணவு சாப்பிட்டால் அதற்கான பணத்தை தர வேண்டியதில்லை. இல்லையேல் சாப்பிட்ட உணவிற்கான பணத்தை கொடுக்க வேண்டும் போன்ற சிறப்பு போட்டிகள் கூட பல கால காலமாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஹைதராபாத்தை சேர்ந்த உணவகம் ஒன்றில் மாறுபட்ட புதிய வியாபார தந்திரத்தை பின்பற்றி வருகின்றனர். இது தற்போது பலரையும் கவர்ந்து வருகிறது.தக்ஷின் 5 என்கிற ஹைதராபாத்தை சேர்ந்த உணவகத்தில் சென்று ‘ப்ளீஸ்’ ‘நன்றி’ ‘வாழ்த்துக்கள்’ போன்ற நல்ல வார்த்தைகளை பயன்படுத்தினால் நீங்கள் ஆர்டர் செய்யும் உணவு வகைகளுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுமாம் . உதாரணத்திற்கு இங்கு சென்று வெஜ் மீல்ஸ்  ‘ப்ளீஸ்’  என்று  ஒன்று ஆர்டர் செய்தால் உங்களுக்கு 15 ரூபாய் தள்ளுபடி தருவார்கள். அதாவது இதன் உண்மையான விலை ரூ.165-இல் இருந்து ரூ.15 குறைத்து ரூ.150-க்கு பெற்று கொள்ளலாமாம் .

இன்றைய உலகில் மனிதர்களுக்கு இருக்க வேண்டிய சின்ன சின்ன நற்பண்புகள் மிகவும் அரிதாக தென்படும் இந்த காலத்தில் , புதிய முயற்சியின்  மூலம் மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் அன்பு பாராட்ட இது மாதிரியான  ஒரு வணிக யுக்தியும் தேவைப்படுகிறது.