சாதிச் சான்றிதழை தூக்கி எறிந்தால் சாதி ஒழிந்துவிடுமா? வெற்றிமாறனின் வேற லெவல் பதில்

234
Advertisement

தமிழ் சினிமாவில் தனித்துவமான கலையோடு சேர்த்து சமூக பொறுப்புணர்வை நினைப்பூட்டும் வகையில் படங்களை எடுக்கும் முதல் வரிசை முற்போக்கு இயக்குநர்களில் முக்கியமானவர் வெற்றிமாறன்.

அண்மையில், தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை நடத்திய தமிழ்க்கனவு நிகழ்ச்சியில், ‘முதல் தலைமுறை சினிமா’ என்ற தலைப்பில் பேசினார் வெற்றிமாறன்.

அப்போது கல்லூரி மாணவர் ஒருவர், ‘பள்ளி, கல்லூரிகளில் சாதியை கண்டிப்பாக குறிப்பிடுமாறு கூறுவது குறித்த உங்கள் கருத்து என்ன?’ எனக் கேட்டார்.

பள்ளி, கல்லூரிகளில் சாதி சான்றிதழ் கேட்பதை நிறுத்த வேண்டும் எனவும், தற்போது மிகவும் கடினமாக இருக்கும் சாதியற்றவர் சான்றிதழ் வாங்கும் முறை எளிமைப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

அப்போது அனைவரும் கைத் தட்டவே,  இடைமறித்த வெற்றிமாறன் சாதிச் சான்றிதழை தூக்கி எறிவதால் மட்டுமே சாதி ஒழிந்து விடாது என பதிவு செய்தார்.

மேலும், உரிமைகளை பெறுவதற்கும் சமூகநீதியை உறுதி செய்வதற்கும் சாதி சான்றிதழ் தேவைப்படுவதாக பேசிய வெற்றிமாறன், சாதி சான்றிதழ் வேண்டாம் என்பதை மக்களின் தனிப்பட்ட தேர்வாக பள்ளி, கல்லூரிகள் அனுமதிக்க வேண்டும் என கருத்து தெரிவித்தார். சாதிச் சான்றிதழ் தொடர்பான வெற்றிமாறனின் கருத்து சமூகவலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.