‘டைரி’ படத்துக்காக அருள்நிதி இவ்ளோ கஷ்டப்பட்டாரா?

73
Advertisement

வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து தனது யதார்த்தமான நடிப்பால், தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் அருள்நிதி.

இந்நிலையில், அருள்நிதி நடித்துள்ள டைரி படத்தை பற்றி, அறிமுக இயக்குநர் இன்னாசி பாண்டியன் பகிர்ந்துள்ளார்.

மேலும், மலைப்பகுதிகளில் உள்ள ஹேர்பின் வளைவுகளில் பயணிக்கும் போது ஏற்படும் பயத்தை மையப்படுத்தி இப்படத்தை எடுத்துள்ளதாக கூறியுள்ள இன்னாசி, டைரி பட கதாபாத்திரத்திற்காக அருள்நிதி உடல் எடையை குறைத்தது மட்டுமின்றி, 10 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலையில் மழையில் நனைந்ததாக தெரிவித்துள்ளார்.

Advertisement

அருள்நிதியுடன் பவித்ரா, ஜெயபிரகாஷ் மற்றும் கிஷோர் நடித்திருக்கும் இந்த படம் ஆகஸ்ட் 26ஆம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.