தேவையில்லாமல் அஜித் பெயரை உபயோகித்த இயக்குனர் அமீர்…. கண்டித்து வரும் ரசிகர்கள் …..

235
Advertisement

சரவண சக்தி இயக்கத்தில் விமல் நடிப்பில் குலசாமி திரைப்படம் வரும் 21ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. மேலும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குனர் அமீர் பேசிய போது குலசாமி படத்தின் நாயகன் விமல், இந்த விழாவில் பங்கேற்காமல் போனது வேதனையாக உள்ளதாகவும்  நடிகர் அஜித்தைப் போல விமலும் பட ப்ரொமோஷன்களில் கலந்துகொள்ளாமல் இருப்பது நல்லதாக தெரியவில்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து குலசாமி பட விழாவில் விமலுக்காக நடிகர் அஜித்தை குறிப்பிட்டு அமீர் பேசியதை கண்டித்து ரசிகர்கள் அஜித்தை ஏன் தேவையில்லாமல் சீண்ட வேண்டும் என கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேநேரம் அமீரின் பேச்சுக்கு பலரும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.