6 மாதங்களில் நேரடி வரி வசூல் 24 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவிப்பு

285

நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் நேரடி வரி வசூல் 24 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அக்டோபர் 8ஆம் தேதி வரையிலான 6 மாதங்களில், நேரடி வரிகள் மூலம் கிடைத்த வசூல் 8 லட்சத்து 98 ஆயிரம் கோடி ரூபாயாகும்.

இதன்மூலம், நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் நேரடி வரி வசூல் 24 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது முந்தைய நிதியாண்டில் இதே காலகட்டத்தில் கிடைத்ததை விட 23.8 சதவிகிதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.