அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநர்-நடத்துநர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு செயல்படுத்தப்படுவதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
அந்த துறை வெளியிட்ட சுற்றறிக்கையில், அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பணிபுரியும் தொழில்நுட்ப பணியாளர்கள், நிர்வாகப் பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களின் வருகை பதிவு பயோமெட்ரிக் கருவி மூலம் பயன்பாட்டிற்கு செயல்படுத்தப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப பணியாளர்கள் காலை 8 மணிக்கும், நிர்வாகப் பணியாளர்கள் காலை 10 மணிக்கும் பணிக்கு வரும் போது வருகை பதிவு செய்ய வேண்டும் என்றும் மாலை பணிமுடிந்து செல்லும்போதும் பயோமெட்ரிக் கருவி மூலம் பதிவு செய்துவிட்டு செல்லவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.