தமிழகத்தில் ஆன்லைன் மூலமாக பொது மக்களை ஏமாற்றும் மோசடி சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
அதன்படி ஒரு வருடத்தில் 288 கோடிக்கும் அதிகமான பணம் பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்து திருடப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் புகாரின் அடிப்படையில்106 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது. அதில் 27 கோடி ரூபாய் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதத்தில் ஆன்லைன் மூலமாக 12 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன.
அதன்படி 67 கோடி ரூபாய் பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்து திருடப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் தேவையில்லாத நபர்களிடம் இருந்து அழைப்புகள் வந்தால் அதனை கண்டு கொள்ளாமல் உஷாராக இருக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.