தமிழகத்தில் போலி சிம்கார்டுகள் மற்றும் மோசடியை தடுக்க சைபர் கிரைம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்….

143
Advertisement

தமிழகத்தில் சைபர் கிரைம் போலீசார் தொலைத்தொடர்பு துறையின் முக அடையாளம் காணும் சாப்ட்வேர் மூலம் ஆய்வு செய்தனர்.

அதில் கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 55ஆயிரத்து982 சிம்கார்டுகளை முடக்கியுள்ளனர். ஒருவர் 403 சிம்கார்டுகளை வாங்கியுள்ளார். ஒரு பெண்ணுக்கு 34 கார்டுகள் உள்ளது. ஒரு சிறுவன் 5 கார்டுகள் வாங்கியது எல்லாம் அம்பலமாகியுள்ளது. இந்த சிம் கார்டுகள் அனைத்தும் வியாபாரிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

2022-ம் ஆண்டில், போலி மோசடி அழைப்பு மூலம் பொதுமக்கள் 288 கோடி ரூபாயை மக்கள் இழந்தனர் என முன்னதாக தகவல் வெளியாகியிருந்தது. இதனால் சைபர் கிரைம் போலீசார் சைபர் குற்றங்களை தடுக்க தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆயிரத்து100 சிம்கார்டு வியாபாரிகளை சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.