பித்தளை காசுகளை தங்கக் காசுகள் என கூறி நூதன மோசடி

192

சென்னை சவுகார்பேட்டை, தங்கசாலை பகுதியைச் சேர்ந்த ஜித்மல் என்பவரிடம், கடந்தவாரம் ஒருவர் 4 தங்கக்காசுகளை கொடுத்து விட்டு, பத்தாயிரம் ரூபாய் வழங்கியிருக்கிறார்.

சிலநாட்கள் கழித்து, 4கிலோ தங்கக்காசுள் இருப்பதாக கூறிய அதே நபர், 90 லட்சம் ரூபாய் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆனால், 30 லட்சம் ரூபாய் மட்டுமே தம்மிடம் இருப்பதாக ஜித்மல் தெரிவித்திருக்கிறார்.

Advertisement

இரண்டு தவணைகளாக பணத்தை வழங்குமாறு தெரிவித்த அந்த நபர், 30 லட்சம் ரூபாயை மட்டும் பெற்றுக்கொண்டு 4 கிலோ தங்கக்காசுகளையும் ஜித்மலிடம் வழங்கினார்.

அந்த “கோல்ட் காயின்”களை சோதனை செய்து பார்த்தபோது அனைத்தும் பித்தளை காசுகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, காவல்துறையினரிடம் ஜித்மல் புகார் அளித்தார்.

பித்தளைக்காசுகளை தங்கக்காசுகள் எனக்கூறி மோசடியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.