கொரோனா பாதிப்பு தமிழகத்தில் குறைவு;19 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை!

314
Advertisement

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், 19 மாவட்டங்களில் நேற்று கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் நேற்று 796 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், அதில் 61 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் இன்று ஒரு உயிரிழப்புக் கூட பதிவாகவில்லை.

இதேபோல், 19 மாவட்டங்களில் ஒருவர்கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. அரியலூர், கரூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் மயிலாடுதுறை ஆகிய 5 மாவட்டங்களில் கொரோனா தொற்றால் ஒருவர்கூட சிகிச்சையில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒன்று ஒரேநாளில் 127 பேர் கொரோனாவில் இருந்து மீண்டதால், 730 பேர் மட்டுமே கொரோனா பாதிப்பில் உள்ளனர்.