10 வருடமாக ஹனிமூன் கொண்டாடும் தம்பதி

200
Advertisement

அமெரிக்காவை சேர்ந்த மைக் ஹோவர்ட் ஆணி (Anne)தம்பதி திருமணம் முடிந்ததில் இருந்து தொடர்ச்சியாக 10 வருடங்களுக்கும் மேலாக ஹனிமூனில் உள்ளனர்.

இதுவரை 64 நாடுகள் வரை பயணித்துள்ள இத்தம்பதி, தற்போது கேரளாவில் தங்கியுள்ளனர்.

ஹனிமூன் தினமான ஆகஸ்ட் 14 அன்று கோவாவிற்கு செல்ல திட்டமிட்டுள்ள மைக் தம்பதியின் சுற்றுலா பட்டியலில் அடுத்ததாக குரோஷியா, போஸ்னியா போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளன.

தங்களின் அனுபவங்களை ஹனி ட்ரெக் என்ற இணையதளத்தில் பகிர்ந்து கொள்ளும் மைக்கும் ஆணியும் Ultimate Journeys For Two மற்றும் Comfortably Wild என இரு புத்தகங்களை வெளியிட்டுள்ளனர்.

இணையதளம் மற்றும் புத்தகம் மூலம் கிடைக்கும் வருவாயில் சுற்றுலா செல்லும் இவர்கள், போகும் நாடுகளில் பஸ் பயணம் உள்ளிட்ட எளிமையான வாழ்க்கை முறையையே பின்பற்றி வருகின்றனர்.