இங்கிலாந்தில் சட்டென தோன்றிய மர்ம உருவம்! வைரலாகும் வீடியோ 

298
Advertisement

இங்கிலாந்து நாட்டின் நாட்டிங்ஹாம்ஷைர் கிளம்பர் பூங்காவில் Hannah மற்றும் டேவ் தம்பதி காலையில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்த போது திடீரெனெ தோன்றி சாலையை கடந்த புகை போன்ற மர்ம உருவத்தை கவனித்துள்ளனர்.

கேமராவில் பதிவான இந்த விநோத காட்சியை அவர்கள் Facebook பக்கத்தில் பதிவிட, வீடியோ வைரல் ஆகத் தொடங்கியுள்ளது. காணொலியை கண்ட பல பயனர்களும், மூடுபனி அல்லது சிகெரெட் புகையாக இருக்கும் என கமெண்ட்களில் பதிவிட்டு வருகின்றனர்.

எனினும், தாங்கள் புகைபிடிக்கவில்லை எனவும் அந்த உருவம் புகையாக இருந்தால் உருவம் மாறி இருக்கும் என்றும் அவ்வாறு அது மாறாதது தான் சந்தேகத்தை எழுப்புவதாக Hanna தெரிவித்துள்ளார்.

மேலும், Hannahவின் கணவர் டேவ், தனக்கு இதற்கு முன் அமானுஷ்ய சக்திகள் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்ததாகவும் தற்போது இந்த அனுபவம் அவரின் பார்வையை மாற்றியுள்ளதாகவும் பகிர்ந்துள்ளார்.