அவசர சிகிச்சை பிரிவை மூடிவிட்டு படுத்துறங்கிய செவிலியர்கள்

42

கோவை அன்னூர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவை மூடிவிட்டு செவிலியர்கள் உள்ளே உறங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குடும்பத் தகராறில் சாணிப்பவுடரை அருந்திய பெண்ணை சிகிச்சைக்காக அழைத்து வந்த போது, அவசர சிகிச்சை பிரிவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது.

இதனால் சிகிச்சைக்கு வந்த பெண்ணின் உறவினர்கள் வெகு நேரமாக கதவை தட்டி செவிலியர்களை அழைத்துள்ளனர்.

Advertisement

சுமார் ஒரு மணி நேரம் கழித்து கதவை திறந்த செவிலியர், சாணிப்பவுடரை பருகிய பெண்ணுக்கு சிகிச்சை அளித்தார்.

நீண்ட நேரமாக உறவினர்கள் கதவை தட்டிக்கொண்டிருந்த வீடியோ வெளியாகி உள்ளது.