போட்டிகள் நிறைந்த உலகம் – மாணவர்கள் தனித்திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்

533

சென்னை பள்ளிக்கரணையில் டி.ஏ.வி. குழுமத்தின் புதிய பள்ளியை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

பள்ளி வளாகத்தை திறந்து வைத்து உரையாற்றிய முதல்வர், அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக கல்விச்சேவை புரி்ந்துவரும் டி.ஏ.வி. குழும பள்ளிகளில் 30,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருவதை குறிப்பிட்டார்.

போட்டிகள் நிறைந்த உலகில் வெற்றிபெறுவதற்கு, மாணவர்கள் தனித்திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

கல்வி நிறுவனங்கள் தாய்மொழிக் கல்விக்கு ஊக்கம் அளிக்கவேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.