விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கைத் தேவையையும் பூர்த்தி செய்வதுதான் திராவிட மாடல் – முதலமைச்சர்

159

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், 81 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், முடிவுற்ற 140 திட்டப் பணிகளை தொடக்கி வைத்தார்.

143 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து 379 கோடி ரூபாய் மதிப்பில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

Advertisement

விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு திமுக ஆட்சியில் செய்தவற்றை சுட்டிக்காட்டி பேசினார்.

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் என வாக்கு வங்கியே இல்லாத விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்தையே கருத்தில் கொண்டு செயல்பட்டு வருவதாகவும் வாக்கு வங்கியை மட்டுமே குறிவைத்து அரசு செயல்படவில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.