படத்தைப் பார்த்துவிட்டு 3 நாட்கள் தூங்கவே இல்லை – முதலமைச்சர்

196

முத்தமிழ் பேரவையின் 41ஆம் ஆண்டு இசை விழாவையொட்டி கலைஞர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.

தமிழ்நாடு அரசு சார்பில் இயல், இசை, நாட்டியத்தில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாடகமாக இருந்தாலும், இசையாக இருந்தாலும், இயல் இலக்கியமாக இருந்தாலும் அவை அனைத்தும் மக்களின் உணர்வோடு கலந்துள்ளதாக தெரிவித்தார்.

Advertisement

எத்தனை இசைகள் வந்தாலும், வளர்ந்தாலும் அவை அனைத்தும் தமிழ் இசையாக இருக்க வேண்டும் என்பதுதான் தனது விருப்பம் என்றும் கூறினார்.

கலைகள் மனதுக்கு இதமானதாக மட்டுமல்லாமல், மானுடத்துக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொணடார்.

ஜெய்பீம் திரைப்படம் தனக்குள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதாக குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜெய்பீம் படத்தில் வரும் சிறைச்சாலை, சித்திரவதை காட்சிகளை தான் நேரடியாக அனுபவித்ததாக தெரிவித்தார்.

எனவே அந்த படத்தைப் பார்த்துவிட்டு 2, 3 நாட்கள் தான் தூங்கவே இல்லை என்றும் கூறினார்.