உலக உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி டிவிட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மனிதரின் அடிப்படைத் தேவைகளுள் தலையாயது உணவு என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே மக்களுக்குப் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதி செய்ய அன்றாடம் நடவடிக்கைகள் எடுத்து வருகிவதாக தெரிவித்துள்ளார்.
உணவளிப்பதை வெறும் வணிகமாகப் பார்க்காமல் அறம் என உணர்ந்து, தரமான உணவை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.