உயிரை துச்சமாக நினைத்த இளைஞரை தேடிவந்த “ஆடி கார்”

46
Advertisement

சில தினங்களுக்கு முன் சிகாகோ இரயில் நிலையத்தில்,இரு நபர்கள் இடையே ஏற்பட்ட மோதலில், ஒருவர் மின்சாரம் பாயும் தண்டவாளத்தில் விழுந்த உயிருக்கு போராடிக்கொண்டுருந்தார்.

அந்நேரம் நடைமேடையில் இருந்த ஒரு இளைஞர் உயிரை துச்சமாக நினைத்து மின்சார பாயும் தண்டவாளத்தில் சிக்கி இருக்கும் நபர் காப்பாற்ற,உள்ளே குதித்து அந்த நபரை காப்பாற்றினார்.இந்த வீடியோ  இணையத்தில் வைரலாகியது.

Advertisement

இந்நிலையில்,அடையாளம் தெரியாத அந்த இளைஞரை கண்டுபிடித்து, வன்முறை எதிர்ப்பு அமைப்பு ஒன்று இவரின் துணிச்சல் மாற்று மனிதநேயத்தை பார்த்து வியந்து ஆருக்கு “ஆடி கார்” ஒன்றை பரிசளித்துள்ளது.

இது குறித்து அந்த இளைஞர் கூறுகையில்,நாள்தோறும் தன் வீட்டிலிருந்து நகரத்தின் வெளியே இருக்கும் பணிசெய்யும் இடத்திற்கு இரு இரயில்கள் மற்றும் பேருந்து மூலம் தான் செல்கிறேன்.இந்த பரிசு என்னை உணச்சிவசப்பட வைத்துவிட்டது என கூறினார்.

அந்நகரத்தின் காவல்துறை அதிகாரிகள் மற்றும் அருகே குடியிருக்கும் மக்களின் பாராட்டுகளுக்கு மத்தியில் இந்த இளைஞருக்கு ஆடி A8 கார் வழங்கப்பட்டது.