தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் நிதியுதவியுடன், கடலோர சுற்றுலாத்தளங்களில் ஏற்படும் விபத்துகளை தடுப்பதற்கான மீட்புப்பணி பயிற்சி வழங்கும் திட்டம் சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று தொடங்கப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் கீழ், 14 கடலோர மாவட்டங்களைச்சேர்ந்த ஆயிரம் மீனவர்களுக்கு உயிர்காக்கும் மீட்புப்பணி பயிற்சி வழங்கப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் கடற்கரை முதல் கன்னியாகுமரி வரை உள்ள மீனவர்களுக்கு 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மீ்ன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.