4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

195

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் அண்மையில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் கனமழை பெய்தது. இந்நிலையில், வங்கக் கடலில் நாளை மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது பயுலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. இந்நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி அந்தமான் கடல்பகுதிகளில், மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.