வன்முறையில் எரிக்கப்பட்ட சான்றிதழ்கள் வருவாய்த்துறை மூலம் மீண்டும் வழங்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ்

357

கள்ளக்குறிச்சி பள்ளிக்கூட வன்முறையில் எரிக்கப்பட்ட சான்றிதழ்கள் வருவாய்த்துறை மூலம் மீண்டும் வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதியளித்தார்.

கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவத்தையடுத்து மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து இன்று சென்னையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அமைச்சர்கள் குழுவினர் நேற்று மேற்கொண்ட ஆய்வில், சான்றிதழ்கள் எரிக்கப்பட்டது குறித்து பெற்றோர்கள் புகார் தெரிவித்ததை குறிப்பிட்டார். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு குறிப்பிட்ட சான்றிதழ்கள் வருவாய்த்துறை மூலம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மாணவர்களின் படிப்பை தொடர்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.