திருப்பூரில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள் கொள்ளை – வடமாநில இளைஞர்கள் இருவர் கைது

273

திருப்பூரில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து செல்போன்களை கொள்ளையடித்து சென்ற, வடமாநில இளைஞர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பூரை அடுத்த லட்சுமி நகர் பகுதியில் சனுப் என்பவருக்கு சொந்தமான செல்போன் கடை உள்ளது. இந்த கடையின் பூட்டை உடைத்து, கடையில் இருந்து 64 செல்போன்களை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சி.சி.டி.வி காட்சிகள் அடிப்படையில், வடமாநில கொள்ளையர்கள் இருவரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 64 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.