இலவச மின்சாரம்? எப்படி விண்ணப்பிக்கணும் தெரியுமா?

100
Advertisement

சூரிய மின்சக்தியை பயன்படுத்தி 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தொடங்கிவைத்தார். இதுகுறித்தான, கூடுதல் விவரங்களை இந்த காணொளி தொகுப்பில் பார்க்கலாம்.

கடந்த 1 ஆம் தேதி மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.நாடு முழுதும், ஒரு கோடி வீடுகளில், சூரிய மின்சக்தி வசதி ஏற்படுத்துவது இந்த திட்டம் ஆகும். இந்த திட்டத்தின்மூலம் 15000 முதல் 18000 ரூபாய் வரை சேமிப்பு கிடைக்கும்.

தற்பொழுது இதில் எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

https://pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில், சோலார் நிறுவுவதற்கான விண்ணப்பம் என்பதில் பதிவு செய்ய வேண்டும். மாநிலம், மின் சேவை நிறுவனம், மின்சார எண், மொபைல்போன் எண், இ-மெயில் ஆகியவற்றை பதிவு செய்யவும்.

பின்னர் மின்சார எண் மற்றும் மொபைல் போன் பயன்படுத்தி, இணையதளத்தில் உள்ளே சென்று, சோலார் நிறுவுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவேண்டும்.

பின்னர் சேவை அளிக்கும்  நிறுவனத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கவும்.  ஒப்புதல் அளிக்கப்பட்ட பின், மின்சார வாரியத்தில் பதிவு செய்துள்ள எந்த ஒரு நிறுவனத்தின் வாயிலாகவும், சூரிய மின்தகடுகளை நிறுவலாம்

பின்னர் இதுதொடர்பான விபரங்களை, இணையதளத்தில் பதிவு செய்து, மீட்டருக்காக விண்ணப்பிக்க வேண்டும்.மீட்டர் நிறுவப்பட்டு, மின்சேவை வழங்கும் நிறுவனம் ஆய்வு செய்து, இணையதளத்தில், மின்சார உற்பத்தி செய்வதற்கான அனுமதி சான்றிதழை வழங்கும். இவ்வாறு சோலார் மின்தகடு நிறுவியதற்கான அறிக்கை உருவாகும். அதன்பின், வங்கிக் கணக்கு உள்ளிட்ட விபரங்களை, இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதற்கு, 30 நாட்களுக்குள், உங்களுடைய வங்கிக் கணக்குக்கு, மானியத் தொகை செலுத்தப்படும்.

-ரிதி ரவி