புகைக்கு எதிராக புதிய முயற்சி எடுக்கும் கனடா

256
Advertisement

கனடாவில் உடல் நலக்குறைவு மற்றும் மரணங்களுக்கு புகைபிடிக்கும் பழக்கம் முக்கிய காரணமாக இருப்பது  தெரிய வந்துள்ளது.

வருடந்தோறும் நிகழும் 48,000 புகையிலை சார்ந்த இறப்புகளை தவிர்க்க கனடா அரசு புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது.

இதுவரை, சிகரட் பாக்கெட்டுகளில் எச்சரிக்கை வாசகங்கள் அச்சடிக்கப்பட்டு வந்த நிலையில், ஒவ்வொரு சிகரெட்டை சுற்றியும் புகைப்பிடித்தலுக்கு எதிராக விழிப்புணர்வு மற்றும் புகைபிடித்தலின் தீமை ஆகியவற்றை வலியுறுத்தும் வாசகங்கள் இடம் பெற உள்ளன.

Advertisement

உலகிலேயே முதல் முறையாக, கனடா இது போன்ற முயற்சியை கையாண்டு இருப்பது சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.