கோவையில் EMI மூலமாக மட்டன், சிக்கன் வாங்கிக்கொள்ளலாம் என்று இறைச்சிக் கடை வெளியிட்டுள்ள அறிவிப்பு மக்களை வியப்படைய வைத்துள்ளது…

110
Advertisement

கோவை மாவட்டம் குனியமுத்தூரைச் சேர்ந்த ரியாஸ் அகமது என்பவர், அப்பகுதியில் சிக்கன் மற்றும் மட்டன் இறைச்சிக்கடை நடத்தி வருகிறார்.

  டிவி, ஏசி, வாஷிங் மிஷின் போன்ற வீட்டு உபயோகப்பொருட்களை EMI முறையில் விற்பனை செய்வதுபோல், தனது கடையில் சிக்கன், மட்டன் ஆகியவற்றை EMI முறையில் வாங்கி செல்லலாம் என்று ரியாஸ் அகமது அறிவித்துள்ளார். வீட்டு விஷேசங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் இறைச்சி வாங்கும் வாடிக்கையாளர்கள் மூன்று மாதம், 6 மாதம், 9 மாதம், 12 மாதம் என தவணை முறையில் பணம் தரலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார். EMI முறைக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக ரியாஸ் அகமது கூறியுள்ளார்.