சத்தீஸ்கரில் வித்தியாசமான முறையில் பட்ஜெட் தாக்கல் சூட்கேஸ்

266
Advertisement

ராய்ப்பூரில் இன்று சட்டிஸ்கர் மாநில சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. முதல்வர் பூபேஷ் பாகல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசினார். அப்போது அவர் கொண்டு வந்திருந்த சூட்கேஸ் தான் அனைவரையும் கவர்ந்தது. மாட்டுச் சாணத்தை காய வைத்து வரட்டியாக்கி அதைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சூட்கேஸ் பூபேஷ் பாகல் அறிமுகப்படுத்தியுள்ள இந்த சாணி சூட்கேஸ் வெகு வேகமாக பாஜகவினர் மத்தியில் பிரபலமாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. அதில் முக்கியமாக, அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தற்போது பூபேஷ் பாகல் கொண்டு வந்த சாணி சூட்கேஸைப் பலரும் டிவிட்டரில் கிண்டலடித்து வருகின்றனர். ஆனால் சிலர் அவருக்கு வக்காலத்து வாங்கியும் பேசி வருகின்றனர்.பசுஞ்சாணத்தை காய வைத்து, அதை கம்பிரஸ் செய்து இப்படி போர்டுகளாக மாற்றி தயாரிக்கின்றனர். பரீட்சை எழுத நாம் பயன்படுத்தும் அட்டை கூட பசுஞ்சாணத்தால் செய்ததுதான் என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால் பரீட்சை அட்டைகள் காகிதக் கூழால் தயாரிக்கப்படுவையாயிற்றே என்று சிலர் அதற்கு விளக்கம் அளித்தும் வருகின்றனர்.