உணவால் மணநாள் மயான நாளான சோகம்

296
Advertisement

தலைமுறைக்கு ஏற்ப உணவு முறைகள் மாறுவது,புதுப்புது உணவுகள் சந்தைக்கு வருவது என்பது ஒருபுறம் இருந்தாலும்.அந்த உணவுகள் உடலுக்கு ஆரோக்கியமா? அல்லது ஆபத்தா? என பார்ப்பது மிகமுக்கியம்.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சும்,சில நேரங்களில் உணவுவே ஆபத்தாகிவிடுவதை பார்த்துஉள்ளோம்.இந்நிலையில் திருமணத்திற்கு முந்திய நாளில் மணப்பெண்ணின் உயிரை பரித்துஉள்ளது சிற்றுண்டி.

மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தை சேர்த்த பெண் ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கபட்டுருந்தது.மணமகள் மும்பையில் மருத்துவப்படிப்பு முடித்துவிட்டு பயிற்சியில் இருந்துவந்தார்.அவருக்கு மே 20 ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.

ஒருபுறம் திருமண ஏற்பாடுகள் வெகு சிறப்பாக நடைபெற்றுவந்தது.திருமணத்திற்காக மணமகள் மற்றும் மணமகனுக்கான திருமண சடங்குகளும் நடைபெற்றுவந்த, அனைத்தும் மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்தது.

திருமணத்திற்கு முந்திய நாள் மணமகள் மகிழ்ச்சியாக தன் குடும்பத்துடன் நேரத்தை கழித்துவந்தார்,அந்நாளில் அவர் வீட்டில் பலவகை உணவுகள்,சிற்றுண்டி ஏற்பாடு செயப்பட்டது.மணமகள் ஆசையுடன்,தோக்ளா எனப்படும் சிற்றுண்டியை சாப்பிட்டுஉள்ளர்.

அதை சாப்ட்டிக்கொண்டு இருக்கும் நேரத்தில் ,மணமகளுக்கு புரையேறி உள்ளது.அவர் குடும்பத்தினர் அவருக்கு தண்ணீர் குடுத்துஉள்ளனர்.ஆனால்  அவரின் உடன்நிலை மோசமடைந்தாக சொல்லப்படுகிறது.அதையடுத்து அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துசென்றுள்ளனர்.

ஆனால்,அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் உயரிழந்தார்.இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு,மணமகளின் உடல் பிரதாப பரிசோதனைக்கும்,அவர் சாப்பிட்ட  தோக்ளா சிற்றுண்டியை ஆய்வுக்கும் அனுப்பியுள்ளனர்.

திருமணம் ஆகி மஹாலக்ஷ்மியாய் புகுந்தவீட்டிற்கு சொல்லுவாள்  என நினைத்தவர்களுக்கு அவள் இப்படி சென்றுவிட்டதை ஏற்கமுடியாமல் சோகத்தில் உறைந்துள்ளனர்