தாய்நாட்டிற்காக போரில் களமிறங்கிய குத்துசண்டை சகோதரர்கள்

317
Advertisement

சகோதரர்கள் மற்றும் முன்னாள் குத்துச்சண்டை சாம்பியங்களான “விட்டலி மற்றும் விளாடிமிர் கிளிட்ச்கோஆகியோர் உக்ரைனினுக்கு எதிரான ரஷ்யா தொடுத்துள்ள போரில் ,தாய் நாட்டிற்காக சண்டையிட போவதை உறுதி அளித்துள்ளனர். விட்டலி கிளிட்ச்கோ தற்போது உக்ரைனின் தலைநகரான கிவ்வின் மேயராக பணியாற்றுகிறார்.

இது குறித்து , பிரிட்டன் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த விட்டலி கிளிட்ச்கோ ,”எனக்கு வேறு வழியில்லை. நான் இதை செய்ய வேண்டும்,” “நான் தாய்நாட்டிற்காக போராடுவேன்.” என கூறினார்.

2014 இல் கிவ் நகரின் மேயராகவும், கிவ் நகர மாநில நிர்வாகத்தின் தலைவராகவும் கிளிட்ச்கோ பதவியேற்றார், தொழில்முறை குத்துச்சண்டையில் இருந்து ஓய்வுபெற்ற ஒரு வருடத்திற்குப் பிறகு, அவரது சொந்த நாட்டில் ஒரு பெரிய சண்டையில் ஈடுபடப்போவதாவும் ,அங்குள்ள மக்களுக்கு நான் தேவை.”

பல வார பதட்டங்களுக்குப் பிறகு, ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தது என கூறினார்.

உலக ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியனான விளாடிமிர் கிளிட்ச்கோ மற்றும் WBC ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியன் விட்டலி கிளிட்ச்கோ ஆகியோர் நவம்பர் 22, 2013 அன்று உக்ரைனின் கீவ் நகரின் மையத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரைனின் ஒருங்கிணைப்புக்கு ஆதரவாக இரவு பேரணியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் , “நாங்கள் முழு பலத்துடன் நம்மைப் பாதுகாத்து சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்காக போராடுவோம்.” என இந்த சகோதரர்கள் தெரிவித்து உள்ளனர்.

உக்ரைனில் ரஷ்ய படைகளை எதிர்கொள்ள விருப்பமுள்ள பொதுமக்களுக்கு உக்ரைன் அரசு ஆயுதங்களை வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இந்தியா உள்ளிட்ட உலகநாடுகள் , உக்ரைன் மீதான போரை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் என கேட்டுகொண்டு உள்ளது.