காரில் மூச்சு திணறிக்கொண்டு இருந்த கைக்குழந்தை-உயிரை காப்பாற்றிய காவலர்கள்

291
Advertisement

அமெரிக்காவின் , ஸ்பிரிங்ஃபீல்ட்  பகுதியில் இரு காவலர்கள் பணியில் இருந்தபோது, அவ்வழியாக கார் ஒன்று வேகமாக வந்து காவலர்களின் அருகில் நின்றுள்ளது.

காரில் இருந்து அழுதபடி இறங்கிய பெண் ஒருவர் தன் குழந்தையை காப்பாற்றுங்கள் என கதறியபடி  காவலர்களின் உதவியை  கேட்டுள்ளார்.சட்டெனெ காரில் உள்ள பார்த்தபோது கைக்குழந்தை ஒன்று மூச்சுத்திணறிக்கொண்டு இருந்தது,சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்டுக்கொண்டு இருந்தது .

சூழ்நிலையை உணர்ந்த இரு காவலர்களும் , உடனடியாக குழந்தையை  வெளியில் எடுத்து, அங்கையே முதல் உதவி அளித்தனர்.மூச்சுத் திணறிக் கொண்டிருந்த 3 மாத குழந்தையை காப்பாற்ற தாங்கள் கற்றுக்கொண்ட உயிர் காக்கும் பயிற்சியை உபயோகித்து குழந்தையை காப்பாற்றினர்.

சரியான நேரத்தில் கைகுழந்தையின் உயிரை காப்பாற்றிய  கிறிஸ்டோபர் சார்லஸ் மற்றும் லூயிஸ் ரோட்ரிக்ஸ்  ஆகிய  இருகாவலர்களை பொதுமக்கள் பாராட்டிவருகின்றனர்.

குழந்தையை காரில் இருந்து வெளியே எடுத்து, குழந்தைக்கு  முதலுதவி அளிக்கும் தருணம் காவலர் உடையில் பொருத்தப்பட்ட சேமராவில் பதிவாகியுள்ளது.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.