உலக ரத்த தான தினம்

107

உலக ரத்த தான தினத்தையொட்டி, உதகை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் எஸ்.பி அம்ரித் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த பேரணியில் பங்கேற்ற உதகை அரசு மருத்துவக்கல்லூரி மாணவ- மாணவிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

Advertisement

புதுச்சேரியில், உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு, ஜிப்மர் மருத்துவமனை சார்பில் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை ஜிப்மர் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ராஜேஷ் அகர்வால் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சைக்கிள் பேரணியில் கலந்து கொண்ட அனைவரும், ரத்ததானம் பற்றிய உறுதிமொழி ஏற்றனர்.