மோடி அலை ஓய்ந்ததா…..உ பியில் சீட் எண்ணிக்கை குறைவால் பிஜேபி அதிர்ச்சி

351
Advertisement

உத்தர பிரதேச மாநிலத்தில், மொத்தம் 403 சட்டப்பேரவைத் தொகுதிகள் இருக்கின்றன . நாட்டிலேயே அதிக சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட மாநிலம் உத்தரபிரதேசம் தான்.நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.தொடக்கத்தில் இருந்தே ஆளும் பாஜக முன்னிலை வகித்து வந்தது. தற்போதைய முன்னிலை நிலவரப்படி, மொத்தம் உள்ள 403 தொகுதிகளில், ஆளும் பாஜக, 276 சட்டப்பேரவைத் தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

எதிர்க்கட்சியான அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி, 120 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது .தற்போதய நிலவரப்படி உத்தர பிரதேச மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமையப் போவது உறுதியாகி உள்ளது. எனினும் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலைக் காட்டிலும் பாஜக பெரிய இழப்பை சந்தித்துள்ளது . கடந்த தேர்தலில், 322 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால் தற்போது 276 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கடந்த தேர்தலைக் காட்டிலும் 64 தொகுதிகளில் கூடுதலாக முன்னிலையில் உள்ளது கவனிக்கத்தக்கது.