அம்மா நான் ஆஸ்கர் வாங்கிட்டேன்! மேடையில் கண்கலங்கிய சிறந்த துணை நடிகர்

289
Advertisement

95வது ஆஸ்கர் விழாவில் சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த எடிட்டிங் என ஏழு விருதுகளை வாரிச் சென்றுள்ளது ‘Everything Everywhere All At Once’ படம்.

சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்ற கே ஹுய் குவான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ‘Indiana Jones’, ‘Temple Of Doom’ மற்றும் ‘The goonies’ ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில் இருந்த கே ஹுய் குவான் விருதை பெற்றுக்கொண்டு உணர்ச்சி வயப்பட்டார்.

அம்மா எனக்கு ஆஸ்கர் கிடைத்துவிட்டது என தனது உரையை தொடங்கிய கே, வரிசையாக தன் மனைவி, நண்பர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசினார்.

தனது பயணம் ஒரு படகில் தொடங்கியது என கூறிய கே, ஒரு வருடம் அகதிகள் முகாமில் வாழந்து இன்று இந்த இடத்தை அடைந்துள்ளேன் எனக் கூறியுள்ளார்.

இது போன்ற நிகழ்வுகள் சினிமாவில் மட்டுமே நடக்கும் என பலரும் நினைப்பதாக கூறிய கே, இது தான் அமெரிக்க கனவு என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

2022ஆம் ஆண்டு வெளியான ‘Everything Everywhere All at Once’ படம் உலக முழுவதும் 100 மில்லியன் டாலர்கள் வசூலை குவித்தது. 38 வருடங்களுக்கு பிறகு ஆசிய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் துணை நடிகர் விருதை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.